மீண்டும் நடிகராகக் களமிறங்கும் இசையமைப்பாளர் தமன்… எந்த படத்தில் தெரியுமா?
இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் தயாரிப்பாளர் என்றால் அது ஆகாஷ் பாஸ்கரன்தான். அவரின் Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷை வைத்து இட்லி கடை, சிம்புவை வைத்து சிம்பு 49 மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது.
இதற்கிடையில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று வெளியானது. படத்துக்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். பாய்ஸ் படத்துக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து தமன் நடிகராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.