சினிமா ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை… கீர்த்தி சுரேஷ் தந்தைக்கு விநாயகன் பதில்!
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழிலும் திமிரு மற்றும் மரியான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் விநாயகன் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.
இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய பங்கும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் விநாயகன் கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமாருக்கு எதிராக காட்டமாகப் பேசியுள்ளார்.
முன்னதாக மலையாள சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது ஆபத்தானது என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள விநாயகன் “சினிமா என்ன உங்கள் குடும்ப சொத்தா? உங்கள் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வேண்டுமானால் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்? நான் ஒரு நடிகன், நான் விரும்பினால் திரைப்படங்களை தயாரித்து, வெளியிடுவேன். இது இந்தியா. ஜெய் ஹிந்த்” எனக் கூறியுள்ளார்.