ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (23:12 IST)

கமல் மீது கோபம்...ஆனால் ’தக்லைஃப்’ பார்த்த பின் மனம் மாறிய மணிரத்னம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கரின் இந்தியன் 2  படத்திலும், மணிரத்னத்தின் தக்லைஃப் படத்திலும் நடித்து வருகிறார்.
 
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவுடன் சேர்ந்து பணியாற்றி, தேர்தல் பிரசாரம் வருகிறது. கமலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த  நிலையில், தக்லைஃப் படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், கமலை தவிர்த்து மற்ற நடிகர்களுக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.
 
இதற்கிடையே  இப்படத்திற்காக  கமலிடம் தாடியை எடுக்க வேண்டாம் என மணிரத்னம் கூறினாராம். ஆனால், அதைக் காதில் வாங்காமல் கமலும் அதை எடுத்துவிட்டதால் மணிரத்னம் டென்சன் ஆகிவிட்டாராம்.
 
ஆனால், சிறிது நேரம்தான் அந்த டென்சன் இருந்ததாம். இப்படத்தை எடுத்தது வரை எடிட் செய்து இருவரும் பார்த்துள்ளனர். படம் சூப்பராக வந்துள்ளதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார். இப்படத்தில் 2 காலக்கட்டத்தில்  நடப்பதால், கமல் 3 வேடத்தில் வருகிறாராம். அதில் ஒரு கேரக்டரில் சிம்பு அவரது இளமைக் காலத்தில் வருவதாக தகவல் வெளியாகிறது.
 
இதனால் கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.