இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்யும் ஜி வி பிரகாஷ்!
ஜிவி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படமான ரிபெல் மார்ச் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தை நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரேமலு புகழ் மமிதா பைஜு நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
1980 களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குனர் நிகேஷ் தெரிவித்துள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
இந்த படம் ரிலீஸாகி இரண்டு வார இடைவெளியில் ஏப்ரல் நான்காம் தேதி ஜி வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் என்ற திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருந்தது. பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பி வி ஷங்கர் இயக்கியுள்ளார். அடுத்தடுத்து ஜி வி பிரகாஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது அவர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.