செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (15:34 IST)

விஜய் vs அஜித் வசூல் போட்டி - அஜித் பின் தங்கியது ஏன்?

விஜய்க்கும் அஜித்துக்கும் இடைப்பட்ட வணிகப் போட்டியில் விஜய் அஜித்தைவிட பல மடங்கு முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எப்போதும் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் என்ற் இருமுனைப் போட்டி நடைபெறும். நடிப்புத்திறமையிலும் வசூல் நிலவரத்திலும் இவ்விரண்டு நடிகர்களிடையேதான் உச்சபட்ச போட்டி இருக்கும். இந்த வரிசையில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் தனது சகப்போட்டியாளர்களை விட வசூல் ரீதியாக கொஞ்சம் அதிக பலமுள்ளவர்களாக இருந்து வந்துள்ளார்கள்.

அந்த வரிசையில் வந்த விஜய்-அஜித் இணை வசூலில் கடந்த சில ஆண்டுகள் வரை சம அளவிலேயே இருந்து வந்தனர். ஆனால் தற்போது அஜித்தை விட விஜய்யின் கை ஓங்கியுள்ளது. விஜய் படங்கள் அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றன. அஜித்தின் இந்த திடீர் பின்னடைவுக்குக் காரணம் என்ன?

அஜித் தொடர்ச்சியாக படங்கள் நடிப்பது இல்லை. அதாவது ஒரு ஆண்டுக்கு இரண்டு படங்கள் அல்லது ஒரு படம் கூட சில சமபங்களில் நடிப்பதில்லை. மேலும் அஜித் நடிக்கும் படத்தில் அஜித்தை தவிர வேறு சிற்ப்பம்சம் ஏதும் இல்லை என்ற அளவிலேயே கதைகளை அவர் தேர்வு செய்கிறார். ஆனால் விஜய்யோ தானே மையமாக இருந்தாலும் வலுவான கதையையும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் சக நடிகர்களையும் தனது படத்தில் துணையாக வைத்துக் கொள்கிறார். வரிசையாக மாற்றி மாற்றி அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

அடுத்தது கதை சம்மந்தப்பட்டது. விஜய் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் நம் மக்களுக்கு எளிதாக தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. உதாரனத்துக்க்கு சர்கார் படம் நம் தமிழ்நாட்டின் நிகழ்கால அரசியலைப் பற்றிப் பேசுகிறது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த சில காட்சிகள் உண்டு. இவையனைத்தும் மக்களின் பிரச்சனைகள் அதனால் மக்கள் எளிதாக கதையினுள் சென்றுவிடுகின்றனர். ஆனால் அஜித் நடித்த விவேகம் திரைப்படமோ எங்கோ யாருக்கும் தெரியாத பல்கேரியா என்ற நாட்டில் நடக்கும் கதை. அதை நம் மக்களால் அதிகமாக தொடர்பு படுத்திக் கொள்ளமுடியவில்லை.

விஜய்க்கும் அஜித்துக்கும் சம அளவிலான ரசிகர்களே உள்ளனர் என்றாலும் விஜய் படம் அதிகளவில் வசூல் செய்ய முக்கியக் காரணம் இந்த இரண்டு பேருக்கும் ரசிகரல்லாத பொதுவான சினிமா ரசிகர்களுக்கு விஜய் படங்கள் பிடிப்பதுதான். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்களாக உள்ளனர். ஆனால் அஜித்துக்கோ அதிகளவில் இளைஞர்கள் மட்டுமே ரசிகர்களாக உள்ளனர். அஜித் படம் அஜித் ரசிகர்கள் தவிர பொதுவான ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்படாததால் அவரது படங்களின் வசூல் விஜய் படங்களின் சாதனையை விட கம்மியாகவே உள்ளது. அஜித்தும் தன் ரசிகர்களுக்காக மட்டும் படம் நடித்தால் போதும் என நினைத்து விட்டார் போலும்.