1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (23:29 IST)

சிம்புவுடன் மீண்டும் த்ரிஷா! உருவாகிறதா விண்ணை தாண்டி வருவாயா 2?

சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விண்ணை தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் கதையும் இரண்டாம் பாகம் தொடர்வது போலவே முடிக்கப்பட்டிருக்கும்

இந்த நிலையில் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், கவுதம்மேனன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள  செய்தி வெளியானதால் இந்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா 2' படமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிம்புவுடன் த்ரிஷா நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதால் மீண்டும் ''விண்ணை தாண்டி வருவாயா 2' உருவாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை அமைதியாக இருப்பதே சரியானது