மீ டு வில் சிம்பு பெயரை கூறிய நடிகை - பொங்கியெழுந்த ரசிகர்கள்

Last Modified செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:44 IST)
மீ டு - வில் சிம்புவின் பெயரை கூறிய நடிகை லேகா வாஷிங்டனை சிம்பு ரசிகர்கள் ஏகத்துக்கும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

 
சமீப காலமாக மீ டூ இயக்கம் நாடெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகைகள், பெண் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள பற்றி தைரியமாக பேசி வருகின்றனர்.
 
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகாரை கூறியதை தொடர்ந்து பல தமிழ் நடிகைகள், திரை பிரபலங்கள்  தங்களுக்குக்கு கொடுத்த பாலியல் சீண்டலகள் பற்றி கூறி வருகின்றனர்.
 
அந்த வகையில், ஜெயம் கொண்டான், கெட்டவன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன் தனது டுவிட்டரில் 'ஒரே ஒரு வார்த்தை' 'கெட்டவன்'  என்று மீடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் லேகா வாஷிங்டன்  கதாநாயகியாக நடித்தார். இந்த படம் எதிர்பாராத சில காரணங்களால் பாதியில் கைவிடப்பட்டது. லேகா வாஷிங்டன் சிம்பு மீது 'மீடு' பதிவு செய்திருப்பதை கண்டு சிம்பு ரசிகர்கள்  கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, அவருக்கு எதிராக மோசமான வார்த்தைகளில் அவர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
இதைக்கண்ட லேகா தனது அடுத்த டிவிட்டரில் “ எனது முந்தையை டிவிட்டிற்கு வந்துள்ள கமெண்டுகளை படியுங்கள். எதனால் பெண்கள் உண்மையை சொல்ல முன்வரவில்லை என்பது புரியும்” என பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :