1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:51 IST)

’தமிழால் இணைவோம்’: அனிருத், சிம்பு டுவிட்டால் பரபரப்பு

simbu aniruth
தமிழால் இணைவோம் என அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனிருத் மற்றும் சிம்பு இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது 
 
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய இணைப்பு மொழியாக மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது