1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The student who fell off the running bus

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி

accident
ஈரோடு மாவட்டத்தில் ஓடும் கல்லூரி பேருந்தில் முன்பக்க கதவு திறந்து மாணவி கீழே விழுந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறதது.

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கல்லூரி  பேருந்தின் முன்பக்கக்  கதவு திறந்து ஓடும்பேருந்தில் இருந்து மாணவி வர்ஷினி சாலையில் விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த வர்ஷினியை அருகில் உள்ளோர் மற்றும் மாணவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவி வர்ஷினி தவறி  கீழே விழும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தி திணிப்பை நாங்களே அனுமதிக்க மாட்டோம்! – ஆச்சர்யப்படுத்திய அண்ணாமலை!