திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 27 மே 2020 (13:28 IST)

சைலன்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி     தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு , ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலரில் வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் அனுஷ்காவை அஞ்சலி காப்பாற்றி உண்மை என்ன என்பதை கணடறிகிறார்.  பின்னர் மாதவன் யார் என்பதை அறிந்து கொலையாளி யார் என்பதை கண்டறியும் விதத்தில் இருந்தது.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதியே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் படம் OTT -யில் வெளியாகும் என்ற வதந்திகளுக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்து திரையில் தான் வெளியாகும் என்பதை உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை இயக்குனர் ஹேமந்த் மதுகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.