செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (14:03 IST)

அவதார் மாதவன் - இணையத்தில் சூப்பர் வைரலாகும் வீடியோ!

மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படம் மூலம் அறிமுகமான மாதவனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம். வருடத்திற்குப் பல படங்கள் என நடிக்காமல் சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் திறமையான நடிகர்.

மாதவன் ரசிகர்களால் மேடி என்று அழைக்கப்படுகிறார். தமிழ், ஹிந்தி என பல படங்களில் நடித்துவிட்ட அவருக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனாலும் இன்றும் இளமை குறையாமல் அப்படியே தான் உள்ளார். வளர்ந்து வரும் இளம் நடிகர்களை விட மாதவனுக்கு இன்றும் ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது  அவதார் பேஸ் பில்டர் ஆப் மூலம் எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட மாதவன் " தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு பிரம்மிக்கிறேன். அவதாரில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். ஆள் அடையாமல் தெரியாத அளவுக்கு அவதார் படத்தில் நடித்தது போன்றே இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஒரு வேலை நிஜமாகவே அவதார் படத்தில் நடித்திருப்பாரோ என பேசி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy) on