1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (16:37 IST)

பள்ளத்தில் விழுந்த குழந்தை மீட்ட ரியல் ஹீரோ …முன்னணி நடிகரின் வைரல் வீடியோ

நடிகர் மாதவன் மாடலாகவும், நடிகராகவும்  இருக்கிறார். அதேபோல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.

நேற்று இவர் ஒரு வீடியோவை ஷேர் செய்தார். அதில், முதலாவது ஓடி வந்த ஒருவர் சிறிது தடுமாறி தடுப்புப் பலகை மீது மோதினார். அவரை அடுத்து வந்தவர் முதல் பரிசு பெற நினைக்காலம் மீண்டும் அவரையே செல்ல அனுமதித்து தான் இராண்டாம் இடம் பிடித்தார். இது நேற்று வைரலானது.

இந்நிலையில் இதேபோல் ஒரு வீடியோவை நடிகர் மாதவன் இன்று ஷேர் செய்துள்ளதால், அதில் ஒருவர் விருட்டென  சாலையில் செல்லும்போது, அந்த வழியே சிறு சைக்கிளில் வந்த குழந்தை பள்ளத்தில் விழப்போனது. நல்லவேளையாக அந்த நபர் பைக்கை கீழே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை மீட்டார்.
இவரது செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.