1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (12:49 IST)

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்த  சித்தார்த் மற்றும் அதிதி ராவ் அதன் பின்னர்  இருவரும் காதலித்து, ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பல  விழாக்களிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.

மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்  ஸ்ரீரங்கபுரம், ஸ்ரீ ரங்கநாயகி சுவாமி கோயிலில் இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் இரு குடும்பத்தினர் சூழ நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை இருவரும் கூட்டாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Edited by Mahendran