வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (17:13 IST)

குருவாயூர் கோவிலில் இன்று ஒரே நாளில் 354 திருமணங்கள்.. இதுவரை இல்லாத சாதனை..!

Guruvayur
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 354 திருமணங்கள் நடந்துள்ளதை அடுத்து இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

கேரளாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று ஒரே நாளில் 354 திருமணங்கள் நடைபெற்றதாகவும் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான திருமணங்கள் இன்று நடந்துள்ளதாகவும் கோவில் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இந்த கோவிலில் நடந்தது என்றும் அதையும் தாண்டி இன்று 354 திருமணங்கள் நடந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போக ஒன்பது திருமணங்கள் தேவஸ்தானத்திற்கு தெரியாமல் நடந்துள்ளதை அடுத்து மொத்தம் இன்று குருவாயூர் கோவிலில் 363 திருமணம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.

இன்று அதிகாலை 4 மணி முதல் குருவாயூர் கோவிலில் திருமணங்கள் நடந்ததாகவும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Edited by Siva