வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (15:27 IST)

ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் செய்துவைத்துவிட்டன… பிரபல நடிகை புலம்பல்!

நடிகை திவ்யா தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமடந்தவர். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸின் இளைஞர் பிரிவில் சேர்ந்து 2013-ல் நடந்த மாண்டியா தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

இப்போது படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு அவர் அரசியலில் முழுவீச்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதை மறுத்து பதிவிட்டுள்ள திவ்யா “ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் செய்துவைத்துவிட்டன. எத்தனை முறை என்பதுகூட நினைவில் இல்லை.  நான் திருமணம் செய்துகொண்டால், நானே அதை அதிகாரப்பூர்வமாக உங்களுக்கு அறிவிப்பேன். அதனால் வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.