1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Samantha upset on photographer filming her outside the gym

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.

அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகவில்லை. இப்போது சில படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் இருந்து மும்பைக்குக் குடியேறி அங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றுக்கு சென்று ஜிம் உடையோடு வெளியே வர சிலர் அவரை வீடியோ எடுத்தனர். இதனால் கோபமான சமந்தா ‘stop it guys.. stop it’ என சொல்லிவிட்டு காரில் ஏறி சென்றுள்ளார். மும்பையில் இதுபோல பிரபலங்கள் ஜிம்மில் இருந்து வெளியே வரும் போது அவர்களைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போக்கு அதிகமாகி வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!