1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (07:46 IST)

சுதந்திர போராட்ட வீரர் கேரக்டரில் சிபிராஜ்: அவரே அளித்த தகவல்

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த திரைப்படங்கள் பல தமிழில் வெளிவந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படம் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழர்களில் ஒருவர் தீரன் சின்னமலை என்பது அனைவரும் அறிந்ததே. அவரது வீரம் காரணமாக வெள்ளையர்கள் நடுங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தீரன் சின்னமலை குறித்த கதையம்சமும் குறித்த திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் தீரன் சின்னமலை கேரக்டரில் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை சிபிராஜ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயனுக்கு எதிராக போராடி பெரும்புகழ் படைத்த தமிழ் வீரன்.இன்னும் சில மாதங்களில், “Musical Theatre” மூலமாக இவரது கதாபாத்திரத்தில் தோன்ற எனக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமைப்படுகிறேன்