1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (19:15 IST)

போலீஸ் ஸ்டேஷன் முன்னாலேயேவா இப்படி பன்னுவாங்க??

தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன் முன்பு, போலீஸாரையே கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ எடுத்த 3 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர்கள் ரிஷிகேஷ், ஆதிகேசவன், மற்றும் ஒரு 15 வயது வாலிபர். அடிதடி வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த இந்த மூவரும், நேற்று அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது போலீஸ் ஸ்டேஷன் முன்பு மூன்று பேரும் சேர்ந்து போலீஸாரை கிண்டல் செய்து டிக் டாக் வீடியோ ஒன்றை எடுத்தனர். இதனைப் பார்த்து பெருங்கோபம் அடைந்த போலீஸார் ஒருவர் அந்த மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதன் பின்னர் ரிஷிகேஷ் மற்றும் ஆதிகேசவனை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த 15 வயது சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.