1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (12:57 IST)

ஸ்ருதி ஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர்!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது லண்டன் காதலருடனான காதலை முறித்துக்கொண்டார்.


 
உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்துவந்தார். 
 
சமீபநாட்களாக ஸ்ருதி ஹாசன் காதலனை பார்க்க லண்டன் செல்வதும் அவரது காதலன் மைக்கேல் சென்னை வருவதுமாக மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருவரும் ஒன்றாகச் சுற்றி வந்தனர். கடந்த 2 வருடத்துக்கும் மேலாகத் தொடர்ந்த இவர்கள் காதல் தற்போது திடீரென  முறிந்துள்ளது. 
 
சமீபத்தில் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசனின் திருமண விழாவில்  கூட காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்து வைத்த ஸ்ருதி ஹாசன் எங்கள் காதலுக்கு அப்பாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார் என கூறினார். ஆகவே இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடிகை ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் வாழ்க்கையில் மீண்டும் புதிய பாதை தொடங்குகிறது. ஆழமான இருண்ட இடத்தில்தான் ஒளி பிரகாசமாக வெளிப்படும். அதிக இசை, அதிகத் திரைப்படங்கள் என காத்திருக்கிறேன். என்னுடன் நான் இருப்பதே எப்போதும் சிறந்த காதல் கதையாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.


 
இந்நிலையில் தற்போது திடீரென காதலனுடன் எடுத்திருந்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார் ஸ்ருதி ஹாசன். மேலும் இவர்களின் இந்த காதல் முறிவை  பற்றி கூறியுள்ள மைக்கேல் கோர்சல்  ''வாழ்க்கை நம்மை எதிரெதிர் துருவத்தில் வைத்துவிட்டது. அதனால் துரதிர்ஷ்டவசமாக தனித்தனிப் பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது. என்றாலும், அந்த இளம்பெண் எப்போதும் என் சிறந்த தோழி. அவருக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டு உறுதி செய்துள்ளார்.