ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (15:08 IST)

காதலருடன் கல்யாணம் எப்போது ? ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’

தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். சென்ற வருடம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இவரது மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் திறமையான நடிகையும் இசைக்கலைஞரும் ஆவார்.
இவர் மைக்கேல் கேர்சேல் என்ற லண்டனைச் சேர்ந்த நாடக நடிகரை காலித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்துதான். ஆயினும் இவர்களின் காதலுக்கு தந்தை கமல்ஹசானும். தாய் சரிகா ஆகிய இருவரும் சம்மதித்து விட்டார்கள் என்று  ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
மேலும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், எனக்குத் தோன்றும் போது திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது காதலரை சந்திக்க லண்டனுக்குப் பறந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.