1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 நவம்பர் 2018 (13:35 IST)

படவாய்ப்பு கிடைக்காததால் ஸ்ருதி ஹாசன் எடுத்த அடுத்த அதிரடி முடிவு!

நடிகை ஸ்ருதிஹாசன். விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், தொடர்ந்து அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் அமையவில்லை.
 
இதனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தற்போது  அப்பா வழியை பின்பற்றும் விதத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆனார் ஸ்ருதி.
 
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை சுருதி தொகுத்து வழங்கி வருகிறார். இதில் வாராவாரம் பல பிரபலங்கள்  அவர் பேட்டி எடுத்து வருகிறார்.
 
இந்நிலையில், அதுவும் சரிவராததால் மனமுடைந்த ஸ்ருதிஹாசன் அடுத்த வருடம் ஆங்கிலத்தில் ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
 
கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஸ்ருதிக்கு இதெல்லாம் கைவந்த காலை என்கிறது சினிமா வட்டாரங்கள்