ரெண்டு வருஷமா வாய்ப்பில்லை! உடல் எடை கூட்டி புசு புசுன்னு மாறிய ஸ்ருதி ஹாசன்.!

Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (14:35 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.


 
7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு  3, பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களின் பேஃரைட்  ஹீரோயினாக வலம் வருகிறார். 
 
ஒல்லி பெல்லி ஹீரோயினாக சினிமாக்களில் நடித்துவந்தவருக்கு சமீப நாட்களாக படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது உடல் எடையை கூட்டி பருமனான தோற்றத்துடன் உருமாறி வருகிறார் ஸ்ருதி ஹாசன். 

இதில் மேலும் படிக்கவும் :