1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:00 IST)

இருட்டு அறையில் பிளாஷ் போட்டு போஸ் கொடுத்து பயமுறுத்தும் ஸ்ருதி ஹாசன்!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
 
கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார். மேலும், ஸ்ருதி சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில் தற்ப்போது ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் இருட்டு அறையில் அமர்ந்துக்கொண்டு பேய் மாதிரி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சின்ன பசங்களை பயமுறுத்தியுள்ளார்.  கொஞ்சம் நல்லா பாக்குற மாதிரி போஸ் கொடுத்தால் ரசிக்குற மாதிரி இருக்கும் பார்த்து பண்ணுங்க ஸ்ருதி..