1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (12:14 IST)

டைம் இல்ல பாஸு... கமலுக்கு செல்லூரார் பதிலடி!

அமைச்சர் செல்லூர் ராஜு பிக்பாஸ் குறித்து கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 
பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பமும் உருப்படாமல் போய்விடும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரியலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டார். 
 
இது குறித்து தற்போது அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது, அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை அமைச்சர்களும் மூதல்வரும் பார்ப்பதில்லை. அதற்கு எங்களுக்கு நேரமும் இல்லை என கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.