செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (15:34 IST)

அட கூமுட்டைகளா... நீங்க ஆரியை எதிர்க்க எதிர்க்க தான் அவருக்கு பலம் கூடுது!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த கோழி-நரி டாஸ்கில் யார் யார் எப்படி விளையாடினார்கள், யார் பெஸ்ட் பெர்பார்மென்ஸ், யார் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் என்பது குறித்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.
 
இதில் நேற்று சோம் மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே வெடித்த சண்டை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை தூண்டியது. இன்று வெளியான முதல் ப்ரோமவில் இது குறித்து கூறிய அர்ச்சனா சோம் மற்றும் ரம்யாவை நாமினேட் செய்து அவர் என்னதான் என் முட்டையை உடைத்து என்னை கடுப்பேற்றியிருந்தாலும் நரியா இருக்கும் போது நரியா இருந்த சோம் கோழியாக இருக்கும் போது கண்றாவியாக இருந்தார் எனக்கூறிவிட்டார்.
 
அதையடுத்து ஷிவானி ரூல்ஸை பிரேக் பண்ணாமல் விளையாடியதாக கூறி அவரை பாராட்டினார் பாலாஜி.
ஆனால், வீட்டில் இருந்த பெரும்பாலானோர் ஷிவானி மற்றும் கேபியை நாமினேட் செய்து அவர்கள் இருவரும் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் என முத்திரை குத்தி ஜெயிலுக்குள் தள்ளிவிட்டனர்.
 
அதையடுத்து தற்ப்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் வீட்டில் இருக்கும் ரம்யா , ஆஜீத் , பாலாஜி உள்ளிட்ட மூவரும் ஆரியை குறித்து பின்னால் பேசி கதைக்கின்றனர். இவங்க மட்டுமில்ல மொத்த குடும்பமே சேர்ந்து ஆரியை எதிர்த்தாலும் அவருக்கு இருக்கும் மக்கள் சப்போர்ட் யாராலும் வீழ்த்த முடியாது. அவரை எதிர்க்க எதிர்க்க தான் பலம் தான் கூடுது. 
 
இது ஏன் இந்த கூமுட்டைகளுக்கு புரியல.... அப்புறம் ஆஜித் ரொம்ப ஆடாதே நீ 3வது வாரமே வெளிய போக வேண்டியது இன்னும் உள்ள இருக்கிறதே இந்த எவிக்ஷன் ரொம்ப ஸ்லோ ஒரு வாரத்துக்கு ஒருத்தருக்கு மேல எவிக்ட் பண்ண முடியாது.... ஃபிரீ பாஸ் மட்டும் இல்லனா நீ ரெண்டாவது வாரமே வெளிய போயிருப்ப தம்பி...