ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (12:38 IST)

சிரிச்சியே மயக்குராலே சண்டாளி... பிக்பாஸையே சிரிக்க வைத்த ரம்யா பாண்டியன்!

இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில் நடத்தப்பட்ட தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் அர்ச்சனா வின் பண்ணதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை தனித்தனியாக அறைக்குள் வரவைத்து சில பல கேள்விகளை அவர்களிடம் கேட்கிறார் பிக்பாஸ். அந்தவகையில் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில்  ரம்யா பாண்டியனிடம் பிக்பாஸ் பேசி சிரித்துள்ளார். 
 
அப்போது, இந்த பிக்பாஸ் வீட்டின் வாழ்க்கை...? என கேட்டதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், எனக்கு யாரையாவது பிடிக்கலைன்னா அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பேன். பின்னர் கோபம் என கேட்டதற்கு, எனக்கு எது எப்போ சரின்னு தோணுதோ அதை சரியாக செய்கிறேன் என்றார். 
 
அடுத்தது அழுகை குறித்து கூறிய ரம்யா, அழுகையில் உண்மை, பொய் இரண்டுமே இருப்பதை பார்க்கலாம். இப்படி பிக்பாஸ் கேட்ட எல்லா கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து வந்த ரம்யா, சக போட்டியாளர்கள் என்ற ஒரு கேள்வி கேட்டதும் அப்படி சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க யப்பா... அதுமட்டுமல்லாது பிக்பாஸிடமே நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் என கூறி அவரை confuse செய்து சிரிக்க வைத்துவிட்டார். மிஸ்டர் பிக்பாஸ் நீக்க இப்படி ரம்யாவுடன் கொஞ்சி குலாவி பேசுவதை ஷிவானி பார்த்தால் செம காண்டாகிடுவார்.