திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 மே 2021 (20:43 IST)

ச்சீ... எரிச்சல் ஆன ஸ்ருதி ஹாசன் - ஏன் தெரியுமா?

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சர்ச்சைகளில் இருந்தும் கிசுகிசுக்களில் இருந்தும் தப்பவில்லை. தனது புதிய காதலருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் அண்மையில் வைரலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #epicfail மற்றும் #toomuchhairdontcare என்ற ஹேஷ்டேக்குகளை இட்டு,  எரிச்சலூட்டும் முகபாவனையுடன் "தெளிவாக, நான் முழு 'கிளாம்' விஷயத்தையும் சரியாகப் பெறுகிறேன். என கூறி வழக்கம் போன்றே வித்யாசமாக போஸ் கொடுத்து பதிவிட்டுள்ளார்.