சனி, 14 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (18:03 IST)

'கூலி’ படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் அறிமுகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நேற்று இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைந்த நிலையில் இன்று இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்து இருப்பதை பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவித்து ஒரு போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஸ்ருதிஹாசன் அவேசமாக இருக்கும் காட்சி இருப்பதை அடுத்து இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்ருதிஹாசனை அடுத்து இந்த படத்தில் வேறு யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran