1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (16:44 IST)

வரிசையாக தெலுங்கு படங்களை ஒளிபரப்பும் சன் டிவி! காரணம் இதுதானா?

சன் தொலைக்காட்சி அண்மையில் தெலுங்கு டப்பிங் படமான அலா வைகுந்தபுரம்லூ திரைப்படத்தை டப் செய்து தெலுங்கில் வெளியிட்டது.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அலா வைகுந்தபுரம்லு. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்தது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் தெலுங்கு வடிவத்திலேயே பார்த்து ரசித்தனர்.

அதனால் அந்த படத்தை தமிழில் டப் செய்து வைகுந்தபுரம் நேற்று சன் தொலைக்காட்சியில் வெளியிட்டது சன் தொலைக்காட்சி. ஆனால் எதிர்பார்த்த அளவை விட இந்த படம் மிகப்பெரிய ரசிகர்களால் அந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புது தமிழ்ப் படங்களை ஒளிபரப்பினால் என்ன ரீச் கிடைக்குமோ அந்த அளவுக்கு ரீச் கிடைத்தது சன் டிவியே எதிர்பார்க்காதது.

அதனால் இப்போது தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படங்களை எல்லாம் தொலைக்காட்சிக்காகவே டப்பிங் செய்து ஒளிபரப்ப உள்ளது. வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த பீஷ்மா என்ற திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது.