ஆச்சி மனோரமாவின் இல்லத்தில் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. விவசாயி வேடத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங், பழம்பெரும் நடிகையான ஆச்சி மனோரமா வீட்டில் இன்று நடைபெறுகிறது. தி.நகரில் அவருடைய இல்லம் அமைந்துள்ளது. இன்றைய ஷூட்டிங்கில், கார்த்தி கிடையாது. மற்ற நடிகர்கள் கலந்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட இருக்கிறது.