1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (18:19 IST)

விவசாயி வேடத்தில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் சயிஷா மற்றும் பிரியா பவானிசங்கர் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்புக்கு கீழே ‘பயிர் செய்ய விரும்பு’ என டேக்லைன் தரப்பட்டுள்ளது. அத்துடன், கார்த்தியின் புல்லட் நம்பர் போர்டில் ‘விவசாயி’ என எழுதப்பட்டுள்ளது. ஆக, விவசாயி வேடத்தில் கார்த்தி நடிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
தெலுங்கில் இந்தப் படம் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது.