1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (11:02 IST)

சக்கரக்கட்டி முதல் ப்ளூஸ்டார் வரை… போராட்டங்கள் குறித்து சாந்தனு உருக்கம்!

இன்று இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் சாந்தணு இந்த படத்தை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில் “சக்கரக்கட்டி முதல் ப்ளுஸ்டார் வரையிலான எனது பயணம் நிறைய பயணங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. வாழ்க்கை முழுவதுக்குமான நினைவுகளைக் கொடுத்துள்ளது. ப்ளு ஸ்டார் படம் இன்று ரிலீஸ் ஆகிறது. உங்கள் வீட்டு பிள்ளைகள் வெற்றிபெறுவதுதான் ப்ளுஸ்டார் படத்தின் கதை. இந்த படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.