வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (14:41 IST)

அரசியல் பேசினால் என்ன தப்பு - நடிகை கீர்த்தி பாண்டியன்

blue star- ashok selvan- keerthy pandiyan
'புளூஸ்டார்' பட செய்தியாளர் சந்திப்பின்போது,'' பா.ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பிச்சுட்டீங்களா….எனக் கேட்கின்றனர். பேசினால் என்ன தப்பு?'' என கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புளூ  ஸ்டார். இப்படத்தை இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன் மற்றும் நீலம் புரடக்சன் தயாரித்துள்ளன.

இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகள்  நடந்து வருகிறது. இன்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியதாவது, பா.ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பிச்சுட்டீங்களா….எனக் கேட்கின்றனர். பேசினால் என்ன தப்பு? நாம் அணியும், உடை, சாப்பிடும் சாப்பாடு, குடிக்கும் தண்ணீர் என அனைத்திலும் அரசியல் உள்ளன. அதைப்பற்றி பேசாவிட்டால் அது இல்லை என்று அர்த்தம் கிடையாது. அதை நீங்கள் தவிரிக்கிறீர்கள் என அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.