இந்த வாரத்தில் வெளியாக உள்ள 7 தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரத்தில் மட்டும் 7 படங்கள் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் புளூ ஸ்டார். இப்படத்தை இயக்குனர் எஸ். ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன் மற்றும் நீலம் புரடக்சன் தயாரித்துள்ளன.
இப்படம் ஜனவரி 25 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வாரம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, கிஷன் தாஸ் ஆகியோர் நடிப்பில், கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படமும் நாளை ரிலீசாகிறது.
இப்படங்களுடன் போட்டியாக முடக்கறுத்தான்,. தூக்குதுரை, ஆகிய 4 படங்கள் நாளை வெளியாகின்றன.
நாளை மறுதினம், த.நா, நியதி, நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள லோக்கல் சரக்கு ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.
இதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.