1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (13:36 IST)

இன்று கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள்: இசை வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித்

இன்றைய தினம் நாம் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதிகள் ஆகி விடுவோம் என்று இயக்குனர் பா. ரஞ்சித், ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். 
 
அவர் மேலும் பேசியதாவது: இன்று மிகவும் முக்கியமான நாள். வீட்டிற்கு சென்று கற்பூரம் ஏற்ற வில்லை என்றால் நாம் எல்லாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகள் இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் எவ்வளவு மோசமான  இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயத்தை உணர்த்துகிறது. 
 
அது போன்ற காலகட்டத்திற்குள் நுழையும் முன்பு நாம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்கு தளத்தையும் தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் மதவாதத்தையும் நம்மிடமிருந்து அழிக்க கலையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறோம். 
 
இந்த நாள் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நாளில் இருந்து புதிய வரலாறு ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கு இருக்க போகிறோம் என்று யோசனை நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார் என்ற பெயரே அரசியல் தான். அந்த நீல நட்சத்திரங்கள் நம்மை சரியாக வழிநடத்தும் என்று நம்புகிறேன்’ என்று ப்ளூ ஸ்டார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசினார்.
 
Edited by Mahendran