வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (14:37 IST)

“அருண் விஜய் மாதிரி நீயும் ஒரு நாள் வருவ”… இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்த விஜய்!

நடிகர் சாந்தணு அருண் விஜய்யின் சினம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஆரம்பமே அமர்க்களமாக அறிமுகமான நடிகர் சாந்தணு பாக்யராஜ். அவர் நடித்த சக்கரக்கட்டி திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது. ஆனால் அவருக்கு போதுமான கவனத்தைப் பெற்றுத்தரவில்லை.

அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும், இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி அமையவில்லை. விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கூட அவரின் கதாபாத்திரம் ட்ரோல்களுக்கு ஆளானது. இந்நிலையில் இப்போது அருண் விஜய்யின் சினம் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் “அருண் விஜய்யை எனக்கு தனிப்பட்ட முறையிலும் பிடிக்கும். அவரின் சினிமா வாழ்க்கையை என்னோடு பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடியும். பலரும் அவரை சொல்லியே என்னை ஊக்கப்படுத்தினர். விஜய் சார் கூட ஒரு முறை என்னிடம் “அருண் விஜய்ய பாரு இவ்ளோ நாள் கஷ்டத்த தாண்டி வந்துட்டாருல்ல, உனக்கும் அதுபோல நல்லது நடக்கும்” எனக் கூறினார்” என்று பேசி படம் வெற்றியை வாழ்த்தினார்.