திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (08:35 IST)

‘பார்டர்’ படத்தின் ரிலீஸைக் கண்டுகொள்ளாத அருண் விஜய்… தயாரிப்பாளரோடு மோதலா?

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் அருண் விஜய்யின் சினம் திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடத்தில் 5 படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ளன.

ஆனால் அருண் விஜய் இந்த பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பையோ அல்லது ரிலீஸ் போஸ்டரையோ தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பகிரவே இல்லை. செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் அவரின் மற்றொரு திரைப்படமான சினம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். சினம் அவர் தந்தை தயாரித்துள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்டர் படத்தின் தயாரிப்பாளருக்கும் அருண் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால் இந்த படத்தைப் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.