திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (12:03 IST)

அஜித் போன்ற நடிகருடன் நடிக்கலாம் – மனம் திறந்த அருண் விஜய்!

மதுரை சார்ந்த கதைகளில் நடிக்க ஆசை என சினம் படம் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் நடிகர் அருண் விஜய் பேட்டி.


ஜி.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் அருள் விஜயன், பல்லக் லால்வாணி, காளி வெங்கட்  நடிப்பில் உருவான சினம் திரைப்படம் செப்டம்பர் 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் மதுரை தங்கரீகல் தியேட்டரில் அதன் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இதில் நடிகர் அருண்விஜய், பல்லாக் லால்வாணி, காளி வெங்கட் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் பேசும் பொழுது ஒவ்வொரு மனிதருக்கும் சினம் வரும். சிலருக்கு சமூகத்தின் மீது கோபம் ஏற்படும் இந்த படத்தில் கோபத்திற்கான நியாயம் குறித்து பேசப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை  பெரும். 

திருநெல்வேலி வட்டாரம் சார்ந்த படத்தில் நடித்துள்ளேன் நீண்ட நாளாக மதுரை பின்னணியாக கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது கூடிய விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன். விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் அஜித் போன்ற முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடித்த தயாராக இருக்கிறேன்.

சொந்த தயாரிப்பில் நடிப்பது கடினம்தான் அதையும் தாண்டி நல்ல படம் கொடுக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் நல்ல கதையம்சம் உள்ளப் படங்களை எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்க திட்டம் இருக்கிறது என்றார்.