செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (13:52 IST)

ஷங்கர் - ராம்சரண் பட ஷூட்டிங்கை நிறுத்திய பெண் அதிகாரி

தில்ராஜு தயாரிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண்  நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங்கை பெண் அதிகாரி நிறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது ராம்சரண் –கியாரா அத்வானி , அஞ்சலி நடிப்பில் ஆர்.சி15 படத்தை இயக்கி வருகிறார்.

.இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யா நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டுங் ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், ஒரு பள்ளிக் கூடத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. அங்கு வந்த அப்பகுதியில் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி, பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்தார். அத்துடன், ‘மாணவர்களின் படிப்பை பாதிக்கும் வகையில் நடக்கும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்ககூடாது’ என கறாராக கூறியுள்ளார்.

ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த  மா  நில பள்ளிக்கல்வவித்துறை அமைச்சர் சபீதா இந்தியா ரெட்டி மீது விமர்சனம் எழுந்துள்ளது. இதனால், சில நாட்களுக்கு தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.