புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (17:58 IST)

பேருந்துகளில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது - அதிகாரிகள் உத்தரவு

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து: பேருந்துகள் ஓடும், மால்கள் திறக்கலாம்
சினிமா பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகின்றன. இந்தப்பாடல்கள் அதிக ஒலியுடன் இசைக்கும்போது, பயணிகள், -கண்டக்டர் இடையேயான தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது.

அத்துடன் இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும் இசைப்படுவது, பயணிகளுக்கு இடையூறாக உள்ளதாகப் புகார் எழுந்தது. எனவே,  இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் சென்னை  மாநகரப் போக்குவரத்துத்துறையில் புகார் கூறினார்.

இதையடுத்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் சினிமாப் பாடல்கள் இசைப்பதற்கு மா நகரப்போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

மேலும், ஓட்டு நர்கள் மற்றும் நடத்துனரின் மன அழுத்தத்தைப் போக்கவே பாடல்கள் இசைக்கப்படுவதாக  ஓட்டு நர்கள் தரப்பில் கூறப்பட்டது.

எனவே, அதிக ஒலி மற்றும் பயணிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விரைவில் 3000 பேருந்துகளில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சந்தானம் நடித்த ‘குலுகுலு’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.