திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (15:57 IST)

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: விசாரணை அதிகாரி நியமனம்!

cbcid
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து இந்த வழக்கை விசாரணை செய்ய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்வார்கள் என ஏற்கனவே ஏடிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிவித்திருந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளதாகவும் இந்த விசாரணையை விரைவில் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.