புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (17:49 IST)

தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

quality
தாம்பரம் ’குவாலிட்டி’ உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள குவாலிட்டி என்ற உணவகத்தில் குவாலிட்டி இல்லாத சிக்கன்கள் இருந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
தாம்பரம் கேம்ப்ரோடு என்ற பகுதியில் குவாலிட்டி என்ற உணவகம் பல வருடமாக இயங்கி வருகிறது. 
 
இந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு 10 கிலோ கெட்டுப்போன இறைச்சி 5 கிலோ அரிசி மற்றும் நூடுல்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது
 
இதனை அடுத்து ரூபாய் 2000 ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.