மலையாள படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்? ஷகீலா பதில்!
ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் பி கிரேட் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.
அதன் பின்னர் அவருக்கு அந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சில தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாலும், அதையெல்லாம் உறவினர்களிடம் நண்பர்களிடமும் பறிகொடுத்துவிட்டு இப்போது சாதாரண வாழ்க்கையைதான் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ஏன் மலையாளப் படங்களில் இப்போது நடிப்பதில்லை என்ற கேள்விக்கு எல்லோரு என்னை செக்ஸ் குயின் போல பார்க்கின்றனர். மேலும் என்னிடம் சொல்லப்படும் கதை ஒன்றாகவும் எடுக்கப்படும் கதை வேறொன்றாகவும் இருக்கிறது. அதனால் தான் மலையாள படங்களில் நடிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.