செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:19 IST)

வெளிநாடு செல்ல துடிக்கும் ஷாருக் கான் & கோ… எமோஷனலாய் உருக வைக்கும் டன்கி டிரைலர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் இன்று டன்கி படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷாருக் கான் மற்றும் அவரது நண்பர்கள் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு அதற்காக பிரச்சனையில் சிக்கிக்கொள்வதைக் காட்டும் உணர்ச்சிப்பூர்வமான டிரைலராக உருவாக்கப்பட்டுள்ளது.