புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 மே 2022 (15:26 IST)

கவனம் ஈர்க்கும் ‘சேத்துமான்’ படத்தின் புதிய போஸ்டர்… ப்ரமோஷனை தொடங்கிய சோனி லிவ்!

பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள சேத்துமான் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படமான ‘சேத்துமான்’ என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை வசனத்தில், புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. வரும் மே 27 ஆம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.
இதையடுத்து தற்போது படத்தின் புதிய வித்தியாசமான போஸ்டரை சோனி லிவ் தளம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.