1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 மே 2022 (16:13 IST)

பா ரஞ்சித் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்… கான்ஸ் திரைப்பட விழாவில்… வெளியான அறிவிப்பு!

பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியாக உள்ளது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் நீலம் புரொடக்‌ஷனோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ்  Golden Ratio Films இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.இரஞ்சித் கலந்துகொள்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்,  அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.