பா ரஞ்சித்- விக்ரம் படத்தின் தலைப்பு இதுதானா? மீண்டும் அந்த ஜானரா?
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லபடுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புப் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு மைதானம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பை வைத்து இந்த திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஜானராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.