தம்பியைப் புகழ்ந்து செல்வராகவன் டிவீட் – உற்சாகமான ரசிகர்கள்!

Last Modified புதன், 9 டிசம்பர் 2020 (16:08 IST)

இயக்குனர் செல்வராகவன் டிவிட்டரில் தனுஷை பாராட்டும் விதமாக டிவிட் செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்படந்தம் ஆனார். ஆனால் நீண்டகாலமாக அந்த படம் தொடங்கப்படாமல் அப்படியே உள்ளது. அதற்கு மிக முக்கியமானக் காரணம் தனுஷ் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதுதான். மேலும் இப்போது செல்வராகவனும் சாணிக்காயிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தனுஷ் தனது கரணன் திரைப்படத்தை முடித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் செல்வராகவனின் படம் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. அதைக் குறிப்பிடும் விதமாக செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘D
யுடன் என்றாலே எப்போதும் தனிச்சிறப்புதான். (when its with D. its always special). என கூறி அதில் தனுஷை டேக் செய்துள்ளார். இதனால் சீக்கிரமே அவர்கள் இருவரும் இணையும் படத்தின் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :