வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (15:42 IST)

பிரியா பவானி சங்கரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

நடிகை பிரியா பவானி சங்கர் கவர்ச்சியான தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கிவரும் பிரியா பவானி சங்கர் இப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்