வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (14:48 IST)

நவரசா படத்தின் சூர்யா ஸ்டில்களை வெளியிட்ட பி சி ஸ்ரீராம்!

மணிரத்னம் தயாரிக்கும் நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் இப்போது உருவாக்கத்தில் உள்ளது.

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில அவர் குறுகிய இடைவெளியில் குறைந்த பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.  அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த கதைகளில் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த பகுதிகளின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.